Jun 8, 2014

ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதையல் : 4 ஆயிரம் ஐம்பொன் நாணயங்கள் சிக்கின

ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதையல் : 4 ஆயிரம் ஐம்பொன் நாணயங்கள் சிக்கின

ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணி நேற்று காலை 10 மணியளவில் தொடங்கியது. முல்லைவாடி பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் இப்பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். தொட்டி கட்டுவதற்காக, தொழிலாளி கொழிஞ்சி (50) என்பவர் குழி தோண்டியபோது, டங் என சத்தம் கேட்டது. இதையடுத்து தொழிலாளர்கள், குழியில் இருந்த மண்ணை அப்புறப்படுத்தினர். அப்போது, குழிக்குள் ஒரு மண் பானை தென்பட்டது. அதை எடுத்து பார்த்தபோது, பானையில் பழங்கால, ஐம்பொன்னால் ஆன 14 கிலோ 650 கிராம் எடைகொண்ட 4 ஆயிரம் நாணயங்கள் இருந்தன. இதில் நாணயத்தின் ஒருபுறம் பாம்பு உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.  இதுபற்றி தொழிலாளர்கள் கொடுத்த தகவலின்படி, ஒன்றிய அலுவலக அதிகாரிகள், பழங்கால நாணயங்களுடன் பானையை கைப்பற்றி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், இதுகுறித்து  தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகே, இந்த நாணயங்கள் எந்த காலத்தைச் சேர்ந்தவை என்பது தெரியவரும். ஐம்பொன் நாணயங்கள் கிடைத்துள்ள சம்பவம் ஆத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment